பெரிய பதவியையும், அது மூலமாக கிடைக்கும் பெரிய தொகையையும் விரும்பாதவர் என பி.சி.சி.ஐ. தலைவரான அனுராக் தாக்கூர் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்

283

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் அனில் கும்ளே தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பி.சி.சி.ஐ. தலைவர் தாக்கூர், இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என நான் ராகுல் திராவிட்டிடம் கோரிக்கை விடுத்தேன் என கூறினார். அதற்கு மறுப்பு தெரிவிக்காத திராவிட், தான் ஜூனியர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்கவே விரும்புவதாக கூறினார் என தெரிவித்தார். இது தான் டிராவிடம் உள்ள நல்ல குணம் என கூறிய தாக்கூர், பெரிய பதவியையும், அது மூலம் கிடைக்கும் பெரிய தொகையையும் அவர் விரும்பவில்லை என புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், சர்வதேச பயிற்சியாளர் என்ற அனுபவம் கும்ப்ளேவுக்கு இல்லாத போதிலும், பல போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் வழிவகுத்துள்ளதாக தெரிவித்தார்.