அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

169

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, 54 ஆயிரம் வடைமாலை சாத்தப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, கிருஷ்ணகிரி அருகே தேவசமுத்திரத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காட்டு வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி ஆஞ்சநேயருக்கு , தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் வடை மற்றும் துளசி மாலைகளை அணிவித்து வழிபாடு நடத்தினர். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.