அணுகுண்டு வீசியதற்கு அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி ஜப்பானில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

244

அணுகுண்டு வீசியதற்கு அமெரிக்கா மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி ஜப்பானில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கடந்த 1941 ம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி அமெரிக்க கப்பற் படை தளமான பேர்ல் துறைமுகம் மீது ஜப்பான் கப்பற்படை தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டாம் உலகப்போரின் களத்தில் குதித்த அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா, நாகாசாகி ஆகிய இரண்டு இடங்களில் அணு குண்டு தாக்குதலை நடத்தியது. இந்த கொடூர தாக்குதலால் ஜப்பான் நாடே சிதறுண்டு போனது. இந்த நிலையில் பேர்ல் துறைமுக தாக்குதல் நடத்தப்பட்டு 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஜப்பான் கோரி வருகிறது. இதையடுத்து, தலைநகர் டோக்கியோவில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஒலிப்பெருக்கி மூலம் ஜப்பான் மக்கள் முழக்கம் செய்தனர்.