அன்புசெழியன் மீது மேலும் பல புகார்கள் குவியும்-சசிகுமார்!

367

பைனான்சியர் அன்புசெழியன் மீது மேலும் பல புகார்கள் குவியும் என திரைப்பட இயக்குநர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது தற்கொலைக்கு பைனான்சியர் அன்புசெழியன் தான் காரணம் என அசோக்குமார் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் துணை ஆணையரிடம் அசோக்குமாரின் தற்கொலை குறித்து சசிகுமார் சுமார் இரண்டு மணிநேரம் விளக்கமளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புசெழியன் மீது மேலும் பல புகார்கள் குவியும் என கூறினார். இதனையடுத்து அன்புசெழியனுக்கு ஆதரவாக திரைத்துறையினர் சிலர் குரல் கொடுப்பது அவர்களின் தனிப்பட்ட கருத்து என சசிகுமார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஞானவேல் ராஜா, அசோக்குமார் தற்கொலை விசாரணை தொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் என்ற முறையில் துணை ஆணையரிடம் விளக்கம் அளித்ததாக கூறினார்.