கமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை

203

இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனப் பேசிய கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அரவக்குறச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறினார். இதனையடுத்து, மதஉணர்வுகளை தூண்டும் வகையில் பேசிய கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழகத்தில் உள்ள 13 காவல் நிலையங்களில் பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கமல்ஹாசன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்ததும், தீர்ப்பை தேதி குறி்ப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்றக்கிளை ஒத்தி வைத்தது. இந்த நிலையில், கமல் வழக்கில், இன்று நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார். அடுத்த 15 நாட்களுக்குள், அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனுதாக்கல் செய்து, முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டுள்ளது.