கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது..!

1045

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு பெற்றது.கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி, இன்று காலை இலங்கை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம், இந்தியா சார்பில் பங்குதந்தை அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த ஆண்டு முதல்முறையாக சிங்கள மொழியில் திருப்பலி நடைபெற்றதால் தமிழக பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். திருப்பலிக்கு பின்னர் நடைபெற்ற தேர்பவனியில் பக்தர்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர். கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் 2 நாட்கள் நடைபெற்ற திருவிழா நிறைவு பெற்றது. இந்த திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்,
கத்தோலிக்க குருக்கள் பங்கேற்றனர். திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து, பக்தர்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப தொடங்கினர்.