அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

266

அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நகர்ந்து லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதாக கூறியுள்ளது. அதே நேரத்தில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து புயலாக மாற இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி தற்போது தமிழகத்தில் இருந்து ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், அது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் பட்சத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.