8 வழிச்சாலை திட்டம் தேவையில்லாத திட்டம் என சாடல் : அன்புமணி ராமதாஸ்

341

சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை இல்லாமல் எட்டு வழிச்சாலை திட்டப்பணிகளை நடத்தக் கூடாது என பாமக இளைஞரணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் தேவையில்லாத திட்டம் என சாடினார். சென்னைக்கும், சேலத்திற்கும் 3 தேசிய நெடுஞ்சாலைகள். இரண்டு ரயில் பாதைகள் மற்றும் விமான சேவை உள்ளநிலையில், அப்புறம் நான்காவது தேசிய நெடுஞ்சாலை எதற்கு? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். இந்த திட்டத்தால் மக்களுக்கு வளர்ச்சி கிடையாது என்று கூறிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒருவருக்கு தான் வளர்ச்சி என்றும் விமர்சித்தார்.