காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம்.

175

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பந்திபூர் -குரேஷ் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 26-ம் தேதி திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது அங்கு எல்லையைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளவரசன், மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டி மற்றும் கண்ணன் ஆகிய 3 வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், பனிச்சரிவில்சிக்கி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த எ.புனவாசல் பகுதியை சேர்ந்த 33 வயதான திருபாண்டி என்ற ராணுவ வீரர் உயிரிழந்ததுள்ளார். மேலும் பனிச்சரிவுக்குள் புதைந்துள்ள உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 50 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.