அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடை நீக்கம்…

238

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரம் பேர் மறு மதிப்பீடு செய்யக்கோரி விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 90 ஆயிரம் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரத்தில் 400 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்ளிட்ட பலர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்தனர். இந்தநிலையில், மாணவர்களிடம் பணம் பெற்ற புகாரில் உமாவை பணியிடை நீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மறுமதிப்பீட்டு தேர்வில் வெற்றி பெற்ற 50 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.