அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

229

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்பெனியா நாட்டில் பிறந்து இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்தவர் அன்னை தெரசா. சிறந்த சமூகப்பணி ஆற்றியதற்காக 1979 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அவர், 1997 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் காலமானார். அன்னை தெரசாவின் சேவையை பாராட்டி அவருக்கு புனிதர் பட்டம் வழங்க போப்பாண்டவர் பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, செப்டம்பர் நான்காம் தேதி வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.