பொறியியல் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நாளை முதல் 14ம் தேதி வரை நடைபெறும்..!

259

பொறியியல் படிப்பில் சேருவதற்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நாளை தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு முதன் முதலாக ஆன்லைன் கலந்தாய்வு முறையினை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ – மாணவிகளுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நாளை முதல் தொடங்கி 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. தினமும் 20 ஆயிரம் மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அவர்களுக்கு தேதி, நேரம், டோக்கன், எண் போன்ற விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளன.