காலியாக உள்ள 230 பணியிடங்களுக்கு பேராசிரியர்களை நியமனம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல்..!

204

காலியாக உள்ள 230 பணியிடங்களுக்கு பேராசிரியர்களை நியமனம் செய்ய அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில், காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு, புதிய பேராசிரியரை நியமிக்க, பல்கலைக்கழக மானியக்குழுவால் தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 5 ஆண்டுகளாக புதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது மானியக்குழு தடை விலகியதை அடுத்து, காலியாக உள்ள 230 பணியிடங்களுக்கு பேராசிரியர்களை நியமனம் செய்ய அண்ணா பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதிய பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான கோப்புகளை உயர்கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. யூஜிசி-யின் வழிகாட்டுதலின்படி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து பேராசிரியர்களை நியமிப்பது தொடர்பு முடிவு எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சம் தெரிவித்துள்ளது.