அண்ணா பல்கலைக்கழகம் நேரடி கலந்தாய்வு முறை வேண்டும் – மு.க.ஸ்டாலின்

352

ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்…

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு இணைய வழியாக நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்ததால், கிராமப்புற மாணவர்கள் பெரும் தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாகியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுரையின்படி, பொறியியல் சேர்க்கை நடைபெறும் சேவை மையங்களில் விண்ணப்ப கட்டணமாக டிமான்ட் டிராப்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள ஸ்டாலின்,

மாணவர்கள் நலன் கருதி ஆன்லைன் கலந்தாய்வுடன், நேரடி கலந்தாய்வு முறையையும் கடைப்பிடிப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.