இன்று முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு..!

534

அண்ணா பல்கலைக்கழகத்தில், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ஆன் – லைன் கலந்தாய்வு, கடந்த 6 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இதில் முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதனைதொடர்ந்து, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான கலந்தாய்வு, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதை அடுத்து, வரும் 8 ஆம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வும், 10 ஆம் தேதிக்கு பின்னர் பொது பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.