பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் இன்று தொடங்குகிறது.

299

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் இன்று தொடங்குகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 17 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அழைப்பு கடிததத்தை பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும் என்று அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் ஒருலட்சத்து 75 ஆயிரத்து 500 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இரண்டு மணி நேரத்திற்கு முன்பே கலந்தாய்வுக்கு வருமாறு மாணவர்களுக்கு அண்ணா பல்கலைகழகம் அறிவுறுத்தி உள்ளது.