சென்னை அண்ணா சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

168

சென்னை அண்ணா சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை, சேத்பட்டைச் சேர்ந்த நிர்மலாதேவியும், அவரது மகன் தட்சணாமூர்த்தியும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் லாரி அவர்களின் வாகனம் மீது மோதியது. இதில், தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி ஓட்டுநர் பாலச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்