அண்ணாநகர் பிளாசாவில் உள்ள 12 கடைகளில் திடீரென தீ பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

227

சென்னை அண்ணாநகர் பிளாசாவில் உள்ள 12 கடைகளில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கம்யூட்டர், ஜவுளி மற்றும் காபி போன்ற கடைகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளன. சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. காலை 6.30 மணியளவில் கட்டிடத்தின் முன்பகுதியில் தீ பிடித்தது. இதையடுத்து பிளாசாவின் காவலாளி கடை உரிமையாளர்களுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தார். தகவலறிந்து வந்த 30 தீயணைப்பு படையினர் 7 வாகனங்களின் உதவியுடன் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.