பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்

409

பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து புறப்பட்டு வந்தார்.அப்போது, முதலமைச்சரை காண்பதற்காக சாலைகளில் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.
இதையடுத்து, அண்ணாசிலைக்கு வந்த முதலமைச்சரை தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், அண்ணாவின்
திருஉருவசிலைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா சிறப்பு மலரை முதலமைச்சர் வெளியிட அமைச்சர் சரோஜா பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.