மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 22வது நாளாக இன்றும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

198

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 22வது நாளாக இன்றும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
ஈரோடு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் 110 பேர் மொட்டையடித்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அனைத்துலக
எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கே.வி. ராமலிங்கம், தென்னரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
அதிமுக மருத்துவர் அணி மாநில செயலாளர், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான பி. வேணுகோபால் தலைமையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர் நிலோபர்கபில் உட்பட பலர் பங்கேற்றனர்.