வாஜ்பாய் உடலுக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் இறுதி அஞ்சலி..!

165

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலக்குறைவால் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இதனையடுத்து, அவரது உடல் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ஆகியோர் நேரில் சென்று வாஜ்பாய் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாஜ்பாய் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.