கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்..!

174

சென்னை மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கருணாநிதியின் சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சமாதியை சுற்றிலும் துருப்பிடிக்காத இரும்புகள் மூலம் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று விடுமுறை தினம் என்பதால், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். சர்க்கார் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்று இருந்த நடிகர் விஜய், இன்று சென்னை திரும்பியதும் நேரடியாக மெரினா சென்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.