கொடிகாத்த குமரனின் 85வது ஆண்டு நினைவு நாள் , ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி

130

சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 85வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏராளமானோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை போராட்டத்தின் போது, திருப்பூர் குமரனை ஆங்கிலேயர்கள் தடியால் தாக்கிய போது கையில் வைத்திருந்த தேசிய கொடியினை கீழே விடாமல் தாங்கிப் பிடித்துக்கொண்டே உயிர் நீத்தார். அவரின் தியாகத்தை போற்றும் வகையில், திருப்பூர் ரயில் நிலையம் அருகே குமரனுக்கு நினைவு மண்டபமும், அவர் உயிர்நீத்த சாலையில் நினைவு ஸ்தூபியும் அமைக்கப்பட்டுள்ளது. கொடி காத்த குமரனின் 85வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவு ஸ்தூபியில் சுதந்திர போராட்ட வீரரின் வாரிசுகள், திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.