அனிதாவின் மரணத்தை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார்-தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநிலத் தலைவர்!

363

மாணவி அனிதாவின் மரணத்தை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாக, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்
சென்னையில் நடைபெற்ற திருநாவுக்கரசரின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவி அனிதாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என குறிப்பிட்டார். நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்காமல் போனதற்கு உச்சநீதிமன்றம்தான் காரணம் என கூறிய அவர், மாணவி அனிதாவின் மரணத்தை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
திருமண விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நீட் தேர்வுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை என கூறுவது வேடிக்கையாக இருப்பதாக விமர்சித்தார்.