உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் தமிழ் மன்னனால் கட்டப்பட்ட அங்கோவாட் கோவில் முதலிடம் ..!

435

உலக பாரம்பரிய இடங்களுக்கான பட்டியலில் தாஜ்மஹாலுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது. தமிழ் மன்னனால் கட்டப்பட்ட அங்கோவாட் கோவில் முதலிடம் பிடித்துள்ளது.
உலகளவில் யுனெஸ்கோ கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய இடங்கள் குறித்த கருத்து கணிப்பை, ஆன்லைனில் தனியார் நிறுவனம் நடத்தியது. பாரம்பரிய இடங்களின் பட்டியலில் கம்போடியா நாட்டில் உள்ள அங்கோவாட் கோவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த கோவில் 12-ம் நூற்றாண்டில் பல்லவ​ மன்னன் இரண்டாம் சூர்யவர்மனால் கட்டப்பட்டதாகும். இந்தியாவில் கட்டப்பட்ட தாஜ்மஹால் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளில் நான்கில் ஒருவர் தாஜ்மஹாலை பார்வையிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, சீன பெருஞ்சுவர், பிரேசிலில் உள்ள இஹாஷு தேசிய பூங்கா, உள்ளிட்ட பல இடங்கள் யுனெஸ்கோ கலாச்சார மற்றும் இயற்கை பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன.