திருப்பதி அருகே செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

0
36

திருப்பதி அருகே சேஷாச்சலம் மற்றும் குன்ட் வெங்கா வனப்பகுதிகளில் இருந்து செம்மரங்கள் வெட்டப்படுவதாக செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதிகளில் இருந்து சந்தன மரங்களை வெட்டிக்கடத்திய சேலம் ஆத்தூரை சேர்ந்த இளையராஜா, தங்கமணி, வெங்கடேஷ் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ஒரு டன் எடையிலான சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY