பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்து..!

308

ஆந்திராவில் நிகந்த சாலை விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள காலப்பாடு கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சோமயாஜுல பள்ளி கிராமம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக, எதிரே வந்த அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.