தனியார் பேருந்து மீது வேன் மோதி விபத்து

475

ஆந்திராவில் தனியார் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குண்டூர் மாவட்டம் வேணுகொண்டாவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 பேர் சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி மலைக்கு சென்றனர். நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பெல்லகூறு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து மீது வேன் மோதியது. இதில் இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.