ஆந்திராவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண் கைது..!

252

ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவில் இருந்து சென்னை வரும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ரயிலில் சோதனை நடத்தினர். அதில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதனைக் கடத்தி வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜாத்தி என்ற பெண்மணியை கைது செய்தனர்.