ஆண்டிபட்டி அருகே டீக்கடைக்குள் காரை ஓட்டியதில், இரண்டு பேர் உயிரிழப்பு!

887

ஆண்டிபட்டி அருகே சொத்து பிரச்சினை காரணமாக, டீக்கடைக்குள் காரை ஓட்டி, இரண்டு பேரை படுகொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராமலிங்கபுரம் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், செல்வராசுக்கும் சொத்து பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை செல்வராஜ் டீக்கடை நடத்திக் கொண்டிருக்கும்போது, ரமேஷ் தனது காரை டீ கடைக்குள் திடீரென ஓட்டி புகுந்துள்ளார். இதில், கடையில் இருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகள் அபிராமி ஆகியோர் காரில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து ரமேஷ் தப்பி தலைமறைவாகிவிட்டார். தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர், இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ரமேசை வலைவீசி தேடி வருகின்றனர்.