பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, சாதாரணமாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

473

பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, சாதாரணமாக தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த ஆஷா என்ற 13வயத சிறுமியை நாகேஸ்வர ராவ் என்ற ராணுவ வீரர் காஷ்மீருக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்த புகாரின்பேரில் நாகேஸ்வர ராவிடம் விசாரணை நடத்தியபோது, தான் ஆஷாவை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் ஆஷா மைனர் பெண் என்பதால் அவர் தனது சொந்த மாநிலமான ஆந்திராவில் இருக்கும் தனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் ஆஷா மற்றும் அவரது பெற்றோரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பெண்கள் கமிஷன் தலைவர் ராஜ குமாரி ஆகிய இருவரும் சந்தித்து நிதியுதவி அளித்தனர். அப்போது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் காவல் அதிகாரியும், சிறுமியின் குடும்பத்தோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சம்பந்தமுடைய சிறுமி ஒரு மைனர் என்பதால், POCSO சட்டத்தின் பிரிவு 23 (2) கீழ், எந்த ஒரு ஊடகமும் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமியின் புகைப்படம், சொந்தபெயர்,உள்ளிட்ட தகவல்களை வெளியிடக்கூடாது.ஆனால் ஒரு மாநில முதல்வரே சட்டத்திட்டங்களை மீறி செயல்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.