சுற்றுலா பேருந்து மீது லாரி மோதி விபத்து : பயணிகள் 5 பேர் பலி, 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

574

நெல்லை அருகே சுற்றுலா பேருந்து மீது லாரி மோதிய விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திராவை சேர்ந்த 40 க்கும் மேற்பட்டோர் பேருந்தில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இந்த பேருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள டக்கரம்மாள்புரம் நான்கு வழிச்சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது திண்டுக்கல்லை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, சுற்றுலா பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் பின் பகுதியில் நின்று கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தினுள் இருந்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 பேரின் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.