கோவில் பூசாரி உள்பட 3 பேர் நரபலி ?

265

ஆந்திராவில் கோவில் பூசாரி உட்பட 3 பேர் தலை வெட்டப்பட்டு, நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டம் கொத்தி கோட்டா கிராமத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஓய்வு பெற்ற ஆசிரியரான சிவராம் ரெட்டி, அவரது சகோதரி கமலம்மா ஆகியோர் பூஜை செய்து வந்தனர். இந்நிலையில் கோவில் முன்பு அவர்கள் இருவர் உட்பட 3 பேர் தலை வெட்டப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதனிடையே, கோவில் முழுவதும் அவர்களது ரத்தம் தெளிக்கப்பட்டிருந்த‌தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர். தகவலறிந்து சென்ற போலீசார், மோப்பநாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கொல்லப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு எந்தவித முன்பகையும், தகராறும் இல்லை எனக்கூறும் அப்பகுதி மக்கள், நரபலி கொடுப்பதற்காகவே இந்த கொலை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதைத்தவிர, அவர்கள் பூஜைசெய்து வந்த கோவிலில் புதையல் இருப்பதாகவும், அதற்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.