ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் H.L.தத்து தெரிவித்துள்ளார்.

311

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் H.L.தத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், 2015-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்தியது தொடர்பாக ஆந்திர காவல்துறையினரால் 20 அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதனை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், உயிரிழந்த 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டதாக எச்.எல்.தத்து தெரிவித்தார்.