மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து, ஆந்திராவில் முழுகடை அடைப்பு போராட்டம் ..!

493

மத்திய பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து, ஆந்திராவில் முழுகடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை எனவும், இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இந்நிலையில் பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததை கண்டித்து ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று முழுகடை அடைப்பு போராட்டம் ஈடுபட்டுள்ளனர். பந்த் நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் இருந்து ஆந்திராவிற்கு இயக்கப்படும் பஸ்கள் தமிழக எல்லைப்பகுதியான திருத்தணி, மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.