ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து நாளை முழு அடைப்புக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

281

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து நாளை முழு அடைப்புக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு தேவையான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சிறப்பு நிதியை அறிவித்தார். ஆனால் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு சாத்தியமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. ஹோடா சாதனா சமிதி அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் விஜயவாடாவில் இயல்புநிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், ஆந்திரம் முழுவதும் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வரும் 11-ஆம் தேதியன்று, ஆந்திரத்தில் உள்ள நெடுஞ்சாலைகளை முற்றுகையிடும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியும் அழைப்பு விடுத்துள்ளதால், தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.