ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

295

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் நேற்று அம்மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் நேற்று மக்களவையிலும் எதிரொலித்தது. ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிடக்கோரி, மக்களவையில், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகளின் எம்பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி, அவர்கள் மக்களவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு, கோஷமிட்டதால், அவையில் கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் இரு முறை ஒத்திவைக்கப்பட்டன.
மீண்டும் அவை கூடியதும், இதே நிலை தொடர்ந்ததையடுத்து, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு தீர்வு காண முயலும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி உறுதியளித்தார். இந்த விவகாரத்தில் முடிவுகளை எடுக்கவும், செயல்படுத்தவும் மத்திய அரசுக்கு உரிய கால அவகாசம் வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, அவை நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்றன.