ஆந்திராவில் 13 வயது சிறுவனுடன் 23 வயது பெண்ணுக்கு திருமணம் ..!

1128

ஆந்திராவில் 13 வயது சிறுவனுடன் 23 வயது பெண்ணுக்கு திருமணம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும் அவரது உறவினரான 23 வயது இளம் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த ஏப்ரல் 27ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தகவல் புகைப்படத்துடன் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் பெற்றோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இளம்பெண், சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகி உள்ளனர்.