ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகளை எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

266

ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகளை எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு போதுமான நிதியுதவி அளிக்கவில்லை என்று கூறினார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். ஆந்திராவுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் பிரதமர் மோடி காற்றில் பறக்கவிட்டுவிட்டதாகவும் சந்திரபாபு நாயுடு புகார் கூறினார். மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கும் வரை தாம் ஒயப்போவதில்லை என்று கூறிய அவர், இதற்கு மாநில மக்கள் தமக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.