கோதாவரி நடு ஆற்றில் தவித்த சுற்றுலாபயணிகள் | சுற்றுலாப் படகில் பெரும் தீ விபத்து ..!

407

கோதாவரி நதியில் சென்ற சுற்றுலா படகில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிக்கிய 80 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கோதாவரி நதியிலிருந்து பாப்பிகொண்ட பகுதிக்கு 80 பேருடன் சுற்றுலா படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆற்றின் நடுவில் சென்ற போது, மின்கசிவு காரணமாக திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். உடனடியாக செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து மீட்பு படகுகள் அனுப்பப்பட்டு நீச்சல் வீரர்கள் மூலம் 80 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தீ விபத்து ஏற்பட்ட படகில் போதிய அளவு உயிர் காக்கும் உபகரணங்கள் இருந்ததா?, உரிய அனுமதியுடன் சுற்றுலா படகு சென்றதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.