எம்.டி.ராமராவின் சுயசரிதை படம் வெளியீடு…

77

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் சுயசரிதை படத்தில் நடித்த பாலகிருஷ்ணா திருமலைக்கு வந்து ஏழுமலையான தரிசனம் செய்தார்.

என்.டி.ராமராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாக உள்ளது. அவருடைய வேடம் ஏற்று நடித்த என்.டி.ராமராவின் மகன் நடிகர் பாலகிருஷ்ணா, நடிகர் சுமந்த், வித்யா பாலன் ஆகியோர் சாமி தரிசம் செய்ய திருமலைக்கு வந்தனர். இவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலய மரியாதையுடன் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பாலகிருஷ்ணா, தனது தந்தையாரின் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.