ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து | 7 பெண் பக்தர்கள் உயிரிழப்பு…!

295

ஆந்திராவில் ஆட்டோ மீது லாரி மோதிய கோர விபத்தில் பெண் பக்தர்கள் ஏழு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் 13 பேர் ஷேர் ஆட்டோ ஒன்றில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர். மொடக்குரு என்ற பகுதி அருகே சென்றபோது, நிலை தடுமாறிய ஆட்டோ எதிரே வந்த மணல் லாரியுடன் வேகமாக மோதியது. இதில், ஆட்டோவில் இருந்த பெண் பக்தர்கள் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து காரணமாக அமலாபுரம் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.