ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

310

ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கு தேசம் எம்பி-க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சாத்தியக்கூறு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்ததையடுத்து, விஜயவாடாவில் தெலுங்கு தேச எம்பி-க்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு அந்தஸ்து கோரி, நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் எம்பி-க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையருகே கூடிய தெலுங்கு தேசம் எம்பி-க்கள், ஆந்திராவை மறுசீரமைப்பு செய்திட வலியுறுத்தியும், சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கிடக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது,தங்கள் கோரிக்கைகள் நிறைவேற மத்திய அரசை வலியுறுத்தி தெலுங்கு தேசம் எம்பி-க்கள் கோஷமிட்டனர்.


ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில், பிரதமர் மோடியின் உதவியை நாட தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சாத்தியக்கூறு இல்லை என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறியதையடுத்து, விஜயவாடாவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்பி-க்களின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தை அமல்படுத்தக் கோரியும், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி, பிரதமர் மோடியை சந்தித்து தெலுங்கு தேசம் எம்பி-க்கள் பேசவிருப்பதாக கூறிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமரின் பதிலைப் பொருத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகில் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார். தெலுங்கு தேச எம்பி-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, கூடுதலாக மரக் கன்றுகளை நட்டு, சாலைகளை சுத்தம் செய்து, ஆக்கப்பூர்வமாக, அமைதியாக போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.