ஆபத்தான சமயங்களில் பெண்களை பாதுகாக்கும் நவீன வாட்ச்!

129

ஆந்திர மாநிலம் குர்னூல் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர் நேராவதி. இவர் பொறியியல் படிப்பை முடித்து விட்டு அமெரிக்காவில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவம் இவரது மனதை வெகுவாக பாதிக்க வைத்தது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பினார்.
கற்பழிப்பு, வழிப்பறி உள்ளிட்ட இக்கட்டான சமயங்களில் பெண்களை பாதுகாக்கும் நவீன சாதனத்தை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினார். தற்போது இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது இவர் கண்டறிந்துள்ள வாட்சை பெண்கள் அணிந்து கொண்டால் போதும். இக்கட்டான சமயங்களில் அவர் ஆபத்தில் சிக்கியிருப்பது குறித்து காவல்துறை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தகவல் அனுப்பும்.
இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முடியும். தற்போது இதே பாணியில் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் இதனைவிட நவீன முறையில் ஸ்மார்ட்வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜசேகர் நேராவதி மேலும் கூறும் போது, ‘இந்த ஆண்டு 1 லட்சம் ஸ்மார்ட் வாட்ச்கள் விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். ஆரம்ப விலை ரூ.9.999 ஆக இருக்கும். பிளிப்கார்ட் மூலமும் விற்பனை செய்ய உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.