ஆந்திராவில் அரசு பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து : 2 பேர் பலி !

525

ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
விஜயவாடாவில் அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. முன்னே சென்று கொண்டிருந்த, இரு சக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.