100 கோடியில் புதிய விமான நிலையம் அடிக்கல் நாட்டு விழாவில் சந்திரபாபு நாயுடு பங்கேற்பு

108

ஆந்திர மாநிலம் சித்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கன அடிக்கல் நாட்டு விழாவில் ம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூர் அருகே உள்ள குப்பம் என்ற இடத்தில் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் உள்நாட்டு விமான சேவைக்கான புதிய விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குத்துவிளக்கு ஏற்றிவைத்து பணிகளை தொடங்கி வைத்தார். 8 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும் எனவும், அமராவதியில் இருந்து பெங்களூர் வரை இந்த விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விமான சேவை விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.