ஆண்டாள் பற்றி தவறான தகவல் தந்தவருக்கு தண்டனை உறுதி-பேராசிரியை விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்!

413

ஆண்டாள் குறித்து, மலிவான நோக்கத்தோடு, விளம்பரத்திற்காக, கேவலமான புகழுக்காக, தவறான தகவல் கொடுத்தவருக்கு தக்க தண்டனை கிடைக்கும் என பேராசிரியை விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.

ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து, தனது வீட்டில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த நாட்டுப்புறக் கலை பேராசிரியை விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், அவரது
கணவர் நவநீதகிருஷ்ணன் ஆகியோரை எச்.ராஜா நேரில் சந்தித்து, உண்ணாவிரதம் இருப்பதை முடித்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சென்ற பேராசிரியை விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், மடத்தின் ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர், ஆண்டாள் சன்னிதி சென்று வணங்கிய அவர், ஜீயர் கொடுத்த துளசி தீர்த்தம் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டுரையை எல்லாரும் படிக்க வேண்டும் என்ற மலிவான நோக்கத்தோடு, விளம்பரத்திற்காக, கேவலமான புகழுக்காக ஆண்டாள் குறித்து தவறான தகவல் கொடுத்தவருக்கு தக்க தண்டனையை ஆண்டாள் வழங்குவார் என்று தெரிவித்தார். ice_screenshot_20180113-071319