தாது வளங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்த 8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்…

இதுகுறித்து பேட்டியளித்த அவர், பல்வேறு துறைகள் சார்ந்த ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அளித்த கடிதங்கள் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். பிற மாநில ஆளுநர்களை போல் மரபுகளை கடைப்பிடித்து தமிழக ஆளுநரும் செயல்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். இந்நிலையில் பசுமையை அழித்துவிட்டு பசுமை வழிச்சாலையை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய அன்புமணி ராமதாஸ், தாது வளங்களை தனியார் நிறுவனங்கள் கையகப்படுத்தவே இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.