என்.எல்.சி 3-வது சுரங்கம் கைவிட கோரி பாமக ஆர்ப்பாட்டம்

158

என்எல்சியில் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெய்வேலியைச் சுற்றியுள்ள கொளப்பாக்கம், விளக்கப்பாடி, கம்மாபுரம் உள்ளிட்ட 26 கிராமங்களில் 4 ஆயிரத்து 842 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி மூன்றாவது திறந்தவெளிச் சுரங்கம் அமைக்க என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கு அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் இரண்டாவது சுரங்கத்தின் வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.