திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அன்புமணி..!

136

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, தருமபுரி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரகதாம்பிகை உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அன்புமணியும் அவர் மனைவி சவுமியாவும் வாக்களித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதியநீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலூர்த் தொகுதிக்குத் தேர்தல் நடத்தாதது வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.